ஸ்ரீரங்கம் பகல் பத்து இரண்டாம் நாள் உற்சவம்

நம்பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!

Update: 2025-01-01 14:57 GMT
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது இதில் பகல் பத்து இரண்டாம் திருநாளான இன்று நம்பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை, மார்பில் ரத்தின மகாலட்சுமி பதக்கம், பூஜகீர்த்தி, நெல்லிக்காய் மாலை, அர்ச்சுன சந்திரன் பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களை சூடியவாறு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வருகிறார். மேலும் இன்று ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நம்பெருமாளையும், ஆழ்வார்களையும் வழிபட்டு செல்கின்றனர்... வைகுண்ட ஏகாதேசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 5 15 மணிக்கு திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News