மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள்
சிவகங்கை மாவட்டம், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்டம், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், பள்ளி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெறவுள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம், ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும், அறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், மாவட்டத்தின் சார்பாக வருகின்ற 04.01.2025 (சனிக்கிழமை) அன்று காலை 7.00 மணியளவில் அரண்மனை வாசல் பகுதியிலிருந்து தொடங்கி நடைபெறவுள்ளது. 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15கி.மீ தூரமும், 13வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 10கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும்,17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும் என மிதிவண்டி போட்டிகள் மேற்கண்ட பிரிவுகளின் படி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5000/- மும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 3000/- மும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 2000/- மும் மற்றும் 6 பிரிவுகளிலும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு தலா ரூ.250/- பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளின் போது தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில், எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு இவ்வலுவலகம் பொறுப்பேற்காது. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து (Bonafide Certificate) வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். சொந்த மிதிவண்டி (சைக்கிள்) கொண்டு வர வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரன மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். இப்போட்டியில் Gear cycle and race cycle பயன்படுத்த அனுமதி இல்லை. போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்/ வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையினை, காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப்படடும் என்பதால், போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/மாணவியர்கள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வர வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி, வருகின்ற 04.01.2025 (சனிக்கிழமை) அன்று காலை 7.00 மணிக்கு அரண்மனை வாசல் முன்பு வருகை தரவேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்கனை 7401703503 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.