தாராபுரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி

தாராபுரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி ஐந்து பேர் வருவார்கள்

Update: 2024-12-30 15:05 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில் பவானி கூட கரையைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாதயாத்திரைக்கு வந்த பக்தர்கள் மீது ரெட் டாக்ஸி வாடகை கார் பக்தர்களின் பின்பகுதியில் மோதியது இதில் ஈரோடு பவானி கூட கரையை சேர்ந்த ராமன்.வயது 54. என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பவானி கூட கரையைச் சேர்ந்த வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ், ஆகிய 5,பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு. மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5, பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். பக்தர்கள் மீது கார் மோதிய சம்பவம் தாராபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாடகை கார் ஓட்டுநர் இடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News