மயிலாடுதுறையில் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் 11-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் பேரணி மற்றும் 1000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மயிலாடுதுறை இயற்கை விவசாயி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுனர். காந்திஜி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகளின் வழியாக பறையாட்டம் முழங்க சிறுவர்களின சிலம்பாட்டத்துடன் "காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இருந்து மயிலாடுதுறையை பாதுகாப்போம்" என வலியுறுத்தி விழிப்புணர்வுடன் ஊர்வலமாக கிட்டப்பா அங்காடியை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.