த.வெ.க. பொது செயலாளர் ஆனந்த் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன் கைப்பட எழுதிய கடித நகலை பொது மக்களுக்கு வினியோகம் செய்து த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த் கைதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-12-30 15:23 GMT
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன் கைப்பட எழுதிய கடிதத்தை தடையை மீறி விநியோகம் செய்ததால் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழக பெண் நிர்வாகிகளை சந்திக்க சென்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீஸார் தி.நகரில் வைத்து கைது செய்துள்ளனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேருந்து நிலையம் எதிரே தவெக கட்சி நிர்வாகிகள் தமிழக காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக தரங்கம்பாடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்களிடம்தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தன் கைப்பட எழுதிய கடித நகலை வினியோகம் செய்தனர்.

Similar News