சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

Update: 2024-12-30 15:37 GMT
விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் பகுதியில் பிரதம மந்திரியின் ஆடை பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு சிப்காட் நிறுவனத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது இ.குமாரலிங்க புறத்தில் நிலம் எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் சில உரிமையாளர்களுக்கு இடத்தின் வில்லங்கச் சான்று 1975 ஆம் ஆண்டு முதல் ஒப்படைக்க வேண்டும் எனவும் சில நில உரிமையாளர்களுக்கு 1960 ஆம் ஆண்டு முதல் வில்லங்கச் சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் பாரபட்சம் பார்ப்பதாகவும் இதை காரணம் காட்டி நில உரிமையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் மேலும் அந்த இடத்தை கையகப்படுத்தியதற்கு நான்கு லட்சம் மட்டுமே ஏக்கர் ஒன்றுக்கு அரசு தருவதாகவும் தங்களுக்கு 25 லட்சம் வரை வழங்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Similar News