மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காணும் பொங்கல் அன்று மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் ஆண்டுதோறும் காலை தொடங்கி மாலை வரை சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் அதை நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது . தரங்கம்பாடி பேரூராட்சி உட்பட எட்டு ஊராட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ரேக்ளா ரேஸ் விழாவிற்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பி எம்எல்ஏக்களை அழைப்பது என்றும் 500க்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரைகள் போட்டியில் கலந்து கொள்ள வைப்பது என முடிவெடுக்கப்பட்டது.