மவுலிவாக்கம் சாலை படுமோசம் வாகனங்கள் சாகச பயணம்

மவுலிவாக்கம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஒட்டிகளாவதி

Update: 2024-12-31 10:36 GMT
சென்னை அடுத்த குன்றத்துார் அருகே மவுலிவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. அங்கே குன்றத்துார்- -- பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் - -குன்றத்துார் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், மவுலிவாக்கத்தில் இருந்து மாங்காடு செல்லும் சாலை அமைந்துள்ளது. இதனால், இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், மவுலிவாக்கம், பரணிபுத்துார், பட்டூர் பகுதியில் இந்த சாலை பல இடங்களில் சேதமாகி குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது. இதனால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மவுலிவாக்கம்- மாங்காடு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.

Similar News