பை விற்பனை தீவிரம்

தைப்பூசத்தையொட்டி ஜோல்னா பை விற்பனை தீவிரம்

Update: 2024-12-31 10:43 GMT
முருகன் கோயில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். நடப்பாண்டு பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், முருகன் கோயில்களுக்கு இருமுடி கட்டியும், விரதம் இருந்தும், பாத யாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில், தைப்பூச திருவிழா முன்னிட்டு, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில், பச்சை நிற வேஷ்டி, துண்டுகள், இருமுடி, ஜோல்னா பை, துளசி மணி மாலைகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து துணிக்கடை வியாபாரிகள் கூறியதாவது : தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, பெரிய பைகளை விட ஜோல்னா பை, இருமுடி அவசியம். எடை குறைவு என்பதுடன் எளிதில் உலர்ந்து விடும். தூக்கிச் செல்வது எளிது. இதனால், திரளான முருகன் பக்தர்கள், பைகளில் சுவாமி படங்களுடன் ஸ்லோகங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஜோல்னா பைகள் பச்சை நிற வேஷ்டி, துண்டுகள், இருமுடி பைகளை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இவை தவிர, தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள், மொத்த கொள்முதல் விலையில் வாங்கிச் செல்கின்றனர். ஜோல்னா பை ரூ.70 முதல் ரூ.100 வரையும், வேட்டி ரூ.80 முதல் ரூ.240 வரையும், மணி மாலை ரூ.25 முதல் ரூ.130 வரையும், துண்டு ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்

Similar News