சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாள்

வாசிப்பு மாரத்தான்

Update: 2025-01-03 09:35 GMT
நாகை ஒன்றியம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலேவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வாசிப்பு மராத்தான் நடைபெற்றது. நாளை இயக்கம் வெளியிட்ட சாவித்திரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. சாவித்திரிபாய் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் கடந்த 1848 -ம் ஆண்டு நிறுவினர். சாவித்திரி பாயின் பணியை மாணவர்கள் உணரும் விதமாகவும், அவருடைய கல்வி சேவையை பாராட்டும் விதமாகவும், மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகப்படுத்தும் விதமாகவும், வாசிப்பு மராத்தான் நடைபெற்றது. மதிய உணவு இடைவேளை மதியம் 1 மணி தொடங்கி 2 மணி வரை மாணவர்கள் தொடர்ச்சியாக சாவித்திரிபாய் புலே பற்றிய நூலை வாசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியர் சிவா மற்றும் பட்டதாரி ஆசிரியர் பால.சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News