முத்துகாபட்டி ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரிவு உபசார விழா!

முத்துகாபட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள், தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள், களப்பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் அமெரிக்கா செல்வம் சால்வை அணிவித்து இனிப்பு காரம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Update: 2025-01-05 10:15 GMT
ஜனவரி ஐந்தாம் தேதியுடன் ஐந்தாண்டு காலம் நிறைவுறும் ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வெளிநாடு வாழ் இந்தியரும், முத்துகாபட்டி ஊராட்சியின் மண்ணின் மைந்தருமான அமெரிக்கா செல்வம் ஏற்பாட்டில் முத்துகாபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரிவு உபசரிப்பு விழா மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள்,தூய்மை காவலர்கள், தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள், களப்பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து இனிப்பு காரம் வழங்கி வாழ்த்துக்களுடன் உபசரிப்பு செய்யப்பட்டது. மேலும்
வரவிருகின்ற பொங்கல் பண்டிகைக்கு பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை
வழங்கியது மட்டுமின்றி,மாநில அளவில் முத்துகாபட்டி ஊராட்சிக்கு நற்பெயர் ஏற்படுத்திய தாங்கள் அனைவரும் பொங்கல் திருவிழா விடுமுறை சமயத்தில் நீங்கள் உழைத்த காலத்திற்கு சற்று இளைப்பாற ஓரிரு நாட்கள் சுற்றுலா சென்று வருவதற்கான ஏற்பாட்டினை தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் எ‌ன்னுடைய சார்பாக ரூபாய் ஒரு லட்சம் வழங்குகிறேன் என்று அமெரிக்கா செல்வம் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் அனைவரும் அவருடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்றங்களை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகை மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு என்று கடந்த ஐந்தாண்டு காலம் அவர்களின் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் அது மிகையாகாது.

Similar News