கொலை வழக்கில் பிடிவாரண்டு: போலீசாரால் தேடப்பட்டவர் கைது

சேலம் போலீசார் நடவடிக்கை

Update: 2025-01-07 03:37 GMT
சேலம் அரியானூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்ராஜ் (வயது 30). இவரை கடந்த 2018-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதனிடையே ராகுல்ராஜ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக அவர் சேலம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராகுல்ராஜை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Similar News