திருச்செந்தூர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தார். மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: முருகபெருமானின் அறுபடை வீடுகளில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டிருந்தேன். கடந்த மாதம் மழை வெள்ளத்தால் வர முடியவில்லை. தற்போது திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளேன். மற்ற கோவில்களுக்கும் சென்று வழிபட உள்ளேன். நான் நடித்த அமரன் படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் குறித்து கேட்கிறீர்கள், அதுபோன்ற சம்பவம் இனி நிகழக்கூடாது. போலீசார் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும். பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழக்கூடாது என்று கடவுளிடம் வேண்டுவோம், நானும் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.