வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது.
மதுரை வலையங்குளம் மயானத்தில் நடைபெற்ற கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை வளையங்குளம் மயானத்தில் நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் என்ற கட்டிட தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகதிற்குரிய வகையில் 8 பேரை விசாரணை செய்தனர். அதில் வலையன்குளம் பகுதியை சேர்ந்த போஸ் என்பவரது மகன் மகேந்திரன் (26) என்பவருக்கும் வேல்முருகனுக்கும் இடையே கடந்த 6மாத திறகு முன்பிருந்து தகராறு ஏற்பட்டுள்ளது. வேல்முருகன் நேற்று முன்தினம் (ஜன.6) இரவு கண்மாய் கரைக்கு சென்று வந்த மகேந்திரனை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் மது அருந்திய வேல்முருகனுடன் தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த கல்லால் தாக்கியதில் வேல்முருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை அடுத்து மகேந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை இறந்த செய்தி ஊருக்குள் பரவியதும் ஒன்றும் தெரியாதவர் போல் ஊருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தார். வேல்முருகன் கொலை தொடர்பாக பெருங்குடி போலீசார் மகேந்திரனை வழக்கு பதிவு செய்து நேற்று (ஜன.8)கைது செய்தனர்.