கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வந்தே பாரத் ரயில் கிராம மக்கள் தவிப்பு
வந்தே பாரத் ரயில் விரைவில் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளதால் ரயில்வே கடவு பாதைகளை பாதுகாப்புக் கருதி ரயில்வே நிர்வாகம் மூடி வருகிறது இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
வந்தே பாரத் ரயில் விரைவில் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளதால் ரயில்வே கடவு பாதைகளை பாதுகாப்புக் கருதி ரயில்வே நிர்வாகம் மூடி வருகிறது இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களின் கடவுப் பாதைகளை நிரந்தரமாக மூடி தேவைக்கு ஏற்ப திறப்பதற்கான ஏற்பாட்டை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே நெய்த வாயல் வழியாக காட்டூர் பழவேற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் மேம்பால பணி முடிவடையாததாலும் 10 ஆண்டுகளாக ரயில்வே சுரங்கப்பாதை பணி துவங்கப்பட்டு கிடப்பில் உள்ளதாலும் தற்போது வந்து பாரத் ரயிலை காரணம் காட்டி ரயில்வே கடல் பாதையை முற்றிலுமாக மூடியதால் கவலையாக செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் பள்ளி கல்லூரி வாகனங்கள் அன்றாடம் பணிகளுக்கு சென்று விட்டு கிராமப்புறங்களில் உள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ரயில்வே நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்