கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் நபர்களிடமிருந்து 17 மனுக்கள் என மொத்தமாக 377மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.