கமிட்டியில் 37.89 லட்சம் வர்த்தகம்

வர்த்தகம்

Update: 2025-01-07 03:41 GMT
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 37.89 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, மக்காச்சோளம் 800 மூட்டை, உளுந்து 300, கம்பு 25, தலா 5 மூட்டை மணிலா, எள், ஒரு மூட்டை ஆமணக்கு என 1,136 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,265 ரூபாய்க்கும், உளுந்து 5,899, கம்பு 3,010, மணிலா 9,386, எள் 15,886, ஆமணக்கு 6,222 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 37 லட்சத்து 89 ஆயிரத்து 532 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Similar News