போக்குவரத்துக்கு இடையூறு மின்கம்பம் அகற்ற கோரிக்கை

காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-01-07 04:01 GMT
காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெரு வழியாக காமாட்சியம்மன் கோவில், உலகளந்தபெருமாள் கோவில், பூக்கடை சத்திரம், புதிய ரயில் நிலையம், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் போடப்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையின் நடுவே நடந்து செல்ல வேண்டியுள்ளதால், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், இத்தெருவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மின்கம்பங்களின் இடையே பதுங்கியுள்ள பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் படையெடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், விஷ ஜந்துக்கள் வாழ்விடமாக உள்ள பஞ்சுகொட்டி தெருவில், சாலையோரம் போடப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News