சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா

போலீசார் விசாரணை

Update: 2025-01-07 03:35 GMT
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3-வது நடைமேடையில் உள்ள ஒரு கழிவறையையொட்டி கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. இதை கவனித்த போலீசார் அந்த பையை எடுத்து சோதனையிட்டனர். அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியூரில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதை அறிந்து அதை இங்கேயே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News