சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ராஜகணபதி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த வீராணம் பகுதியை சேர்ந்த பிச்சமுத்து (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.1,710 மற்றும் செல்போன், மொபட் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் இரும்பாலை பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக லோகநாதன் (42), குமார் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.