போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது தர்மபுரி ஆட்சியர் அறிவிப்பு
இது குறித்து தர்மபரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்கவுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப் -2 ஏ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதி யில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையத ளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோயில் ரோடு, விருப்பாட்சிப் புரம், தர்மபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது