சாலை மறியல் செய்த பெண்கள் மீது வழக்கு பதிவு
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் மீது தர்மபுரி நகர காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வத்தல்மலை பிரிவு சாலையில், தடங்கம் ஊராட்சியை தர்மபுரி நகராட்சியுடன் இணை எதிர்ப்பு தெரிவித்து, 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் சாலை மதியலில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று வி.ஜெட்டி அள்ளி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் தர்மபுரி-சேலம் மெயின் ரோடு அவ்வை வழி சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். இதுபற்றி தகவலறிந்த தர்மபுரி நகர காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதனிடையே, பொது போக்குவரத்திற்கு இடையூ ஏற்படுத்தும் வகையிலும் மறியலில் ஈடுபட்டதாக உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், 2-ஆண்கள், அதிமுக பிரமுகர் பழனியம்மாள் உள்பட 80 பெண்கள் மீது நகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.