கொண்டலாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தியேட்டர் உரிமையாளர் பலி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சேலம் குகை பகுதி புலிகுத்தி தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 73). இவர் சேலத்தில் உள்ள மூன்று தியேட்டர் உரிமையாளர். நேற்று காலை பூலாவரியில் உள்ள நண்பரை பார்க்க சென்று விட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சங்ககிரி மெயின் ரோடு நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பு வந்து போது அந்த வழியாக வந்த கார் மாசிலாமணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாசிலாமணி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாசிலாமணி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்துகொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலத்தில் பிரபல தியேட்டர் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.