சேலத்தில் ஓசியில் பீடா கொடுக்காததால் தந்தை, மகனுக்கு பாட்டில் குத்து
போலீசார் விசாரணை
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 60). இவரது மகன் சுகவனேஸ்வரன் (36). வீட்டில் பீடா கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கருவாட்டு மண்டி பகுதியை சேர்ந்த பாபு (30) என்பவர் வந்து பீடா கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பாக்கியராஜ் ஏற்கனவே வாங்கிய பீடாவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாபு பணம் தர மறுத்து அங்கிருந்த பாட்டிலால் அவரை குத்தியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அங்கு ஓடி வந்த சுகவனேஸ்வரன் தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த தந்தை மகன் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.