பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

கன்னங்குறிச்சி பகுதியில் நடந்தது

Update: 2025-01-07 03:28 GMT
கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ், அண்ணாதுரை தலைமை தாங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு மிகவும் அவசியம். இதற்காக பள்ளி மற்றும் கல்லூரி வளாகம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துத்திருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகள் பாதுகாப்பாக மூடி இருக்க வேண்டும், போதிய காவலாளிகளை நியமிக்க வேண்டும், கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்கிறதா என அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News