பில்லாளி ஊராட்சியில்

அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் கூட்டம்

Update: 2025-01-08 06:06 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில், அதிமுக பூத் கமிட்டி அமைக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பக்கிரிசாமி, அவைத் தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏவும், அமைப்பு செயலாளருமான எஸ்.ஆசைமணி கலந்து கொண்டு, பூத் கமிட்டி அமைக்கும் நோக்கம் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் பேசினார். கூட்டத்தில், இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைப்பது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், இளைஞரணி மாவட்ட தலைவர் ஆர்.ராம்சந்தர், இளைஞர் அணி நிர்வாகி கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சகாயராஜ் வரவேற்றார். முடிவில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார். தொடர்ந்து பில்லாளி, தாதன்கட்டளையில் கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. காரையூர், திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூர் ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் கூட்டம் நடைபெற்றது.

Similar News