கிருஷ்ணகிரியில் மாரத்தான் ஓட்டம்; எம்எல்ஏ துவக்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கிருஷ்ணகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டம் இன்று நடந்தது. இந்த போட்டியை எம்.எல்.ஏ மதியழகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டி நடைபெற்றது.