குற்ற சம்பவங்கள் தடுக்க சிசிடிவி கேமராக்கள் திறப்பு.
மதுரை கருங்காலக்குடி, கிடாரிபட்டியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடி மற்றும் கிடாரிப்பட்டி ஊராட்சி தலைவர்கள் முயற்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் இன்று( ஜன.5) திறந்து வைக்கப்பட்டது. இதில் மேலூர் ஆய்வாளர் சிவசக்தி, கொட்டாம்பட்டி ஆய்வாளர் ஜெயந்தி, கருங்காலக்குடி ஊராட்சி தலைவர் பீர் முகமது, கிடாரிப்பட்டி தலைவர் ஹேமா மதிவாணன் கலந்து கொண்டனர். தனிஷ் கேம் சிசிடிவி நிறுவனம் மூலம் இவை பொருத்தப்பட்டது.