தமிழக அரசின் நலத்திட்டங்களை மகளிர் அணியினர் பெண்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும்.! -கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி நாமக்கல் மகளிர் அணிக்கு அட்வைஸ்
மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி வரவேற்றார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கவுரி முன்னிலை வகித்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் திருச்சி சாலையில் நளா ஹோட்டலில் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி தலைமை வகித்தார்.மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி வரவேற்றார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கவுரி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி கலந்து கொண்டு பேசியதாவது..... தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும், தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம்,மகளிர் உரிமைத்தொகை, மகளிர் சுய உதவிகுழுவினருக்கு கடன் உதவி, புதுமைப் பெண்கள் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.பெண்களுக்கு, தந்தையாகவும், சகோதரராகவும், அப்பாவாகவும் இப்படி தாயுமானவராக இருக்கக் கூடியவர் நமது முதலமைச்சர். பெண்கள் முழுமையாக நம்முடைய முதலமைச்சர்தான் எதிர்கால தமிழினத்தை காப்பாற்றக் கூடியவர் என்று நம்புகின்றனர். எனவே இனி வரும் தேர்தலில், முழுமையாக பெண்களின் ஆதரவு நமக்கு கிடைக்கும்.தமிழக அரசின் நலத்திட்டங்களை எல்லாம், மகளிர் அணியினர் பெண்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும். கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடியிலும், மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளை நியமிக்கவேண்டும்.அதற்கான பணிகளை மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அந்தந்த நகர, ஒன்றிய பேரூராட்சி செயலாளர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்டத்திற்கு என்று ஒரு சிறப்பு உள்ளது. மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் நமது மாவட்டத்தை சார்ந்தவர்.நமது மாவட்டம் மகளிர் அணி செயல்பாட்டில் முன்னோடியாக இருந்தால்தான் அவருக்கும் பெருமை, அனைவருக்கும் பெருமை. இவ்வாறு கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்.பி பேசினார்.கூட்டத்தில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ , மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாநில நிர்வாகி வக்கீல் நக்கீரன், மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் உள்ளிட்ட திரளான திமுகவினர் மற்றும் மகளிரணியினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.