புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம்!- நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல்!
புதுச்சத்திரம் அருகே இலக்கியம்பட்டி எனும் இடத்தில் அவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தில் பயணம் செய்த இருபதுக்கும் மேற்பட்டோர் காயம்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.வளைவில் அதிவேகமாக திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் நவணி ஊராட்சி பள்ளிப்பட்டி, ஓலப்பாளையம் பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் 63பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பேருந்து மூலம் சென்றிருந்தனர். கோவிலுக்கு சென்று திரும்பும் போது புதுச்சத்திரம் அருகே இலக்கியம்பட்டி எனும் இடத்தில் அவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஊர் பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவருடன் புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கௌதம், அரசு மருத்துவர்கள் ரகுகுமரன், மணிகண்டன், திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், சின்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.