செளமியா அன்புமணி கைது செய்ததை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது.
செளமியா அன்புமணி கைது செய்ததை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது.
செளமியா அன்புமணி கைது செய்ததை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும், திமுக அரசைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பசுமைத் தாயகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நேற்று மாலை கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில், கரூர் பாமக மாவட்ட செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் பாமகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட தலைவர் தமிழ்மணி, கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேசன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட பாமகவினரை கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினர் சிறைப்படுத்தினர்.