குமரி மாவட்டம் குமாரபுரம் பகுதி சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் தம்பி மனைவி சிந்து (57) இவர் அந்த பகுதியில் உள்ள அவரது குடும்ப கோவிலை சுத்தம் பணியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர் திடீரென சிந்துவின் கழுத்தில் கிடந்த மூன்றே கால் பவுன் செயினை பறிக்க முயன்றார். சிந்து கூச்சலிடவே , மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து சிந்து கொற்றிகோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் நடத்தினர். இதில் சிந்து வின் நகை பறித்தது அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை இன்று 5-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.