மேல்மருவத்துார் சென்ற மினி பஸ் கவிழ்ந்து 7 பெண்கள் காயம்
மேல்மருவத்துார் சென்ற மினி பஸ் கவிழ்ந்து 7 பெண்கள் காயம்
கோயம்புத்துார் மாவட்டம், ரத்தினபுரி கிராமம், புதுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் மங்களநாதன் மகன் ஆகாஷ், 25; டிரைவர். இவர் நேற்று கோயம்புத்துார் மாவட்டம், கே.கே., புதுார் இந்திரா நகர் பகுதியில் இருந்து மினி பஸ்சில் 13 பெண்களை ஏற்றிக்கொண்டு மேல்மருவத்துார் செல்வதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.நேற்று அதிகாலை 5:30 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூர் பைபாஸ் சாலையில், முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஆகாஷ் பஸ்சை திருப்பி உள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சென்டர் மீடியனில் ஏறி சாலையில் கவிழ்ந்தது.இதில் பஸ்சில் பயணம் செய்த கோயம்புத்துார் கே.கே., புதுார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அங்குசாமி மனைவி குமார வடிவு, 55; அங்குசாமி மகள் மாரியம்மாள், 40; பழனியப்பன் மனைவி சரஸ்வதி, 47; மாணிக்கம் மனைவி மாரியாயி, 40; முனியாண்டி மனைவி சாரதா, 50; தங்கவேல் மனைவி ராணி, 49; சேதுராமன் மனைவி செல்வி, 61; ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.