கரூர் சேகருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு சின்ன நாயக்கன்பட்டி பிரிவு அருகே டிசம்பர் 4ம் தேதி வந்தபோது கரூர் வெங்ககல்பட்டி ராஜா மற்றும் சிலர் லாரியை தடுத்து நிறுத்தி டிரைவரை மிரட்டி பணம் பறித்தனர். வெள்ளியணை காவல் நிலையத்தில் ராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் சில வழக்குகள் இவர் மீது உள்ளதால் நேற்று இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.