விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 502 மனுக்கள் குவிந்தன
கலெக்டர் அலுவலகத்தில் 502 மனுக்கள் குவிந்தன
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனே கவனம் செலுத்தி குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இதில், முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 502 மனுக்கள் பெறப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.8,900 வீதம் முடக்கு வாதத்தால் பாதித்த இரு குழந்தைகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலியும், தலா ரூ.11,445 வீதம் இரு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்ற சக்கர கை மிதிவண்டிகளை கலெக்டர் பழனி வழங்கினார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) யோகஜோதி, சிவக்கொழுந்து (நிலம்), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முகுந்தன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.