நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

பத்மநாபபுரம்

Update: 2025-01-07 04:42 GMT
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதி சேர்ந்தவர் உதயகுமார் மகள் ஸ்ரீ துர்கா (25). இவர் நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள முருகன் கோயிலுக்கு செல்வதற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஸ்ரீ துர்காவின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை  பறிக்க முயன்றார். ஆனால் இளம் பெண் நகையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.       இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி சென்று விட்டார். இது குறித்து ஶ்ரீ துர்க்கா தக்கலை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் நேற்று (6-ம் தேதி) மாலை  வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News