கோவை: ராக்கெட் ராஜா கூட்டாளி போதைப்பொருளுடன் கைது !
பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளி 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கோவை ரத்தினபுரியில் நேற்று நடந்த அதிரடி சோதனையில், பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளி 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்கிற தம்பி ராஜா (60). இவர் மீது 8 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு கோவையில் நடந்த கொலை வழக்கில் தப்பி ஓட முயன்றபோது காயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது சென்னையில் வசித்து வரும் ராஜ்குமார், பெங்களூரில் இருந்து போதைப்பொருள் வாங்கி கோவையில் விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.போலீசார் அவரை கைது செய்து, அவரது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ராஜ்குமாருக்கு போதைப்பொருள் சப்ளை செய்தவர்கள் யார்? வேறு யாரெல்லாம் இந்த கும்பலில் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.