மறைந்த திமுக உறுப்பினர் குடும்பங்களுக்கு கலைஞர் குடும்ப நல நிதி!- கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வழங்கினார்
1062 குடும்பத்தினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் குடும்ப நலநிதியாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது
நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மற்றும் அத்தனூர் பேரூர் மற்றும் வெண்ணந்தூர் பேரூர்களில் கடந்த மார்ச் 2024 முதல் தற்பொழுது வரை மறைந்த 158 கழக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திராவிட சிந்தனை எழுத்தாளர் மதிமாறன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும்,மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு மறைந்த கழக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் குடும்ப நிலை வழங்கி பேசுகையில் .. நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர்களில் கழக உறுப்பினர்கள் மறைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் குடும்ப நலநிதி வழங்கி வருகிறோம். அதன்படி ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியம் மற்றும் வெண்ணந்தூர் அத்தனூர் ஆகிய பேரூர்களில் கடந்த 6 மாதத்தில் கடந்த மார்ச் 2024 முதல் தற்பொழுது வரை மறைந்த 158 கழக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நலநிதி வழங்கி உள்ளோம். அதுபோல இதுவரை நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல் கிழக்கு நகரம் 36, நாமக்கல் மேற்கு நகரம் 25, நாமக்கல் தெற்கு நகரம் 32, நாமக்கல் ஒன்றியம் 49, மோகனூர் ஒன்றியம் 107, புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் 47, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம் 41, மோகனூர் பேரூர் 28, சேந்தமங்கலம் ஒன்றியம் 104, கொல்லிமலை ஒன்றியம் 29, எருமப்பட்டி ஒன்றியம் 70, சேந்தமங்கலம் பேரூர் 39, எருமப்பட்டி பேரூர் 3, சிராப்பள்ளி பேரூர் 20, நாமகிரிப்பேட்டை பேரூர் 61, காளப்பநாயக்கன்பட்டி பேரூர் 29, ராசிபுரம் நகரம் 27, ராசிபுரம் ஒன்றியம் 48, வெண்ணந்தூர் ஒன்றியம் 102, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் 93, அத்தனூர் பேரூர் 21, வெண்ணந்தூர் பேரூர் 35, பட்டணம் பேரூர் 4, பிள்ளாநல்லூர் பேரூர் 12 என மொத்தம் 1062 குடும்பத்தினருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் குடும்ப நலநிதியாக ரூ. 1 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, பேரூர் கழக செயலாளர்கள் ராஜேஷ், கண்ணன்,மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர், சார்பு அணி அமைப்பாளர்கள் சித்தார்த்,கிருபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.