கோழி சண்டை இரண்டு பேர் கைது
காளையார்கோவில் அருகே கோழியை காணவில்லை என தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்;
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே விட்டனேரியை சேர்ந்தவர் முத்துவேல்(44) இவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்களது கோழியை காணவில்லை என்று தகராறில் ஈடுபட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த முத்துவேல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து முத்துவேல்(44) கொடுத்த புகாரின் அடிப்படையில் கருவாயன்(32), பிரகாஷ்(35), சுந்தராம்பாள்(45) சரளா(48) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காளையார் கோவில் போலீசார் சுந்தராம்பாள்(45) சரளா(48) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.