ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தஞ்சை ஆசாமி போக்சோவில் கைது
தஞ்சாவூரிலிருந்து திங்கள்கிழமை இரவு சென்னை சென்ற உழவன் விரைவுரயிலில் தஞ்சாவூர் மாவட்டம் நாகைரோடு வேட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த சுந்தரவேலு(57) என்பவர் திருப்பதி சென்று மொட்டை போடுவதற்காக பயணித்தவர் நிறைந்த குடிபோதையில் 14வயது சிறுமிடம் சில்மிஷம் செய்ததால் அவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
. தஞ்சாவூரிலிருந்து திங்கள்கிழமை இரவு சென்னை சென்ற உழவன் விரைவு ரயிலில் தஞ்சாவூர் மாவட்டம் நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த சுந்தரவேலு(57) என்பவர் திருப்பதி சென்று மொட்டை போடுவதற்காக பயணித்தவர் நிறைந்த குடிபோதையில் இருந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆனைக்காரன்சத்திரம்-வல்லம்படுகை இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், அதே பெட்டியில் பயணித்த 14 வயது சிறுமியை சுந்தரவேலு பாலியல் சில்மிஷன் செய்துள்ளார். சிறுமி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவரது பெற்றோர் சுந்தரவேலுவை பிடித்து ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுந்தரவேலுவை இறக்கிய போலீஸார் அவரை மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமாரசாமி மற்றும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் தலைமையிலான போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து சுந்தரவேலுவை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்