ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த பஜனை மடத்தில் மார்கழி மாத சுப்ரபாதம்.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு.
போளூர் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த பஜனை மடத்தில் மார்கழி 12ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் முதல் கோயில் நிர்வாகம் சார்பில் சுப்ரபாதம் மற்றும் திருப்பாவை பாடல்கள் மற்றும் சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணரே தனக்கு விருப்பமான மாதமாக குறிப்பிட்ட மாதம் மார்கழி மாதமாகும். இந்த மாதத்தில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து, நீராடி, கோயிலுக்கு சென்று வழிபடுவதும், விரதம் இருப்பதும் நம்முடைய பாவங்கள், கர்மவினைகள் நீங்க செய்யும் என்பது நம்பிக்கை. மார்கழியில் விரதம் இருந்து வழிபட்டால், இறைவனின் அருள் முழுவதுமாக கிட்டும் என்பது ஐதீகம். மாதங்களில் மிகவும் உயர்வான மாதமாகவும், ஆன்மிக மாதமாகவும் கருதப்படுவது மார்கழி மாதம். சூரிய பகவான், தனுசு ராசியில் தன்னுடைய பயணத்தை துவங்கும் மாதமாகும். இது தேவர்களின் விடியற்காலை பொழுதாக, அதாவது பிரம்ம முகூர்த்த நேரமாக கருதப்படுவதால் இது புண்ணிய பலன்களையும், மோட்சத்தை தரும் மாதமாகவும் கருதப்படுகிறது. இது பெருமாள், சிவன் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற மாதமாகும். இந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மார்கழி மாதம் துவங்கிய நிலையில் ஜனவரி 13ம் தேதி வரை மார்கழி மாதம் உள்ளது. அதிகாலைப் பொழுதின் சிறப்பை குறிக்கும் அம்சமாகவே கருதப்படும் மார்கழி மாதத்தை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். தனுர் மாதம் என்று அழைக்கப்படும் இந்த மாதத்தில் கோயில்களில் வழக்கமான வேத மந்திரங்களுக்கு பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடி இறைவனுக்கு பூஜை செய்யப்படும். இந்நிலையில் மார்கழி மாதத்தின் காலை வேலைகளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜையில் நடைபெறும் அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீலஸ்ரீ அச்சுதானந்த பஜனை மடத்தில் மார்கழி 16 ஆம் இன்று காலை 6 மணி அளவில் முதல் கோயில் நிர்வாகம் சார்பில் சுப்ரபாதம் திருப்பாவை சேவையும் தொடர்ந்து நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் போளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான அத்திமூர் ஜடதாரிகுப்பம் வசூர் குன்னத்தூர் இரெண்டேரிப்பட்டு மாம்பட்டு கரைப்பூண்டி வெண்மணி திண்டிவனம் பெலாசூர் சனிக்கவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாட்களிலும் பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்வது குறிப்பிடத்தக்கது. மேலும் பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.