காவேரிப்பட்டணம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
காவேரிப்பட்டணம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சி கூட்டம் தலைவர் அம்சவேணி தலைமையில் நடைபெற்றது. தலைமை எழுத்தர் வெங்கடாசலம் வரவேற்றார். இக்கூட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையின் நடுவே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறையின ரின் அனுமதியோடு அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் எர்ரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வி.எஸ்.கே.என். நகர், அண்ணா நகர், ஸ்ரீராமு நகர், தேர்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளை காவேரிப்பட்டணம் பேரூராட்சி யுடன் இணைப்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.