சங்கரன்கோவிலில் போதைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது
போதைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு சங்கரன்கோவில் போக்குவரத்து பெண் காவலர் கிருஷ்ணவேணி தலைமையில் பேருந்து பயணிகளுக்கும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து பெண் காவலர் கூறிய போது போதைப் பழக்கம், அதனை உட்கொள்பவர் மட்டுமன்றி மொத்தக் குடும்பத்தையும் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும். பிரச்சினை எதுவாயினும் அதற்குப் போதை தீர்வன்று. குடும்பத்தை நினைத்துப் பார்த்தாலே இப்பழக்கத்திற்கு அடிமையாவதைத் தவிர்க்கலாம் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.