சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி, ஸ்ரீ கோமதி அம்பாள் ஆகிய தெய்வங்களை தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சாமி தரிசனம் செய்த பின்னர் கோவில் யானை கோமதி-க்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கன்னியாகுமரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு சங்கரன்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்த அவர், பொங்கல் தொகுப்பு 1000 ரூபாய் வழங்குவது குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி தெரிவித்த போது மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் எலக்சன் வந்தா நாங்கள் கொடுக்கிறோம் எனவும் தெரிவித்தார்.