பாவூர்சத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா

தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

Update: 2025-01-01 01:49 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி இருந்து திருநெல்வேலி விரிவுபடுத்தப்பட்ட சாலையில் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் 20 நீர்மருது மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட ஹார்ட்புல்னெஸ் தியான திட்ட ரகுநாதன் முதல் மரக்கன்றை நட்டு வைத்து துவக்கி வைத்தார். வரும் நாட்களில் தென்காசி முதல் பாவூர்சத்திரம் வரை சாலையின் இருபுறங்களிலும் மரங்களை நட்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெறும் என்று தெரிவித்தார். இன்று உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல். நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம். இன்று காற்று மாசுபடுகிறது மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம். இன்று இங்கு நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம் என்று குறிப்பிட்டார்.

Similar News