விளையாட்டு மைதானத்தை சீரமைத்த திமுக நிர்வாகி.
மதுரை உசிலம்பட்டி அருகே விளையாட்டு மைதானத்தை திமுக நிர்வாகி சீரமைக்க நடவடிக்கையை மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் அப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராம இளைஞர்களும் மாணவர்களும் விளையாட்டு போட்டிகள் மற்றும் உடல் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த விளையாட்டு மைதானம் முறையான வசதிகள் இல்லாது, ஆங்காங்கே முட்செடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்தும் காணப்படுவதால் விளையாட வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் மற்றும் மானுத்து கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் இந்த விளையாட்டு மைதானத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைத்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் பெரிதும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்