தர்மபுரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டியது
ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வான வேடிக்கைகளுடன் பொதுமக்கள் உற்சாகமாக 2025 ஆங்கில புத்தாண்டு வரவேற்றனர்
உலகம் முழுவதும் நேற்று டிசம்பர் 31 நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பல்வேறு கொண்டாட்டங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 12 மணி அளவில் தர்மபுரி பேருந்து நிலையம் நல்லம்பள்ளி பென்னாகரம் பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வான வேடிக்கையுடன் கூடிய பட்டாசுகளை வெடித்தும் கிழக்குகளை வெட்டியும் 2025 ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர் மேலும் எந்தவிதமான அசம்பாவித செயல்களும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்