பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கியவர் கைது.
மதுரை அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் ராயபாளையத்தை சேர்ந்த ரமேஷ் (41) மற்றும் சிவரக்கோட்டை மகேஸ்வரன் (21) ஆகியோர் நேற்று முன்தினம் ( டிச.30) இரவு பணியில் இருந்துள்ளர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த துாத்துக்குடி மாவட்டம் கந்தா என்ற தண்டபாணி (22), உட்பட 2 பேர் பெட்ரோல் நிரப்புமாறு கூறினர். அவர்கள் போதையில் இருந்ததால் ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற அவர்கள் பீர்பாட்டில் மற்றும் இரும்பு ராடால் இருவரையும் தாக்கினார்கள். இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் தண்டபாணியை கள்ளிக்குடி போலீசார் கைது செய்தனர்.