ராணிப்பேட்டையில் மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி பயிற்சி!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பயிற்சி

Update: 2025-01-01 02:18 GMT
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக முன்னணி பயிற்சி நிறுவ னம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு பயிற்சியினை வழங்க உள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சேர www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News