சவேரியார் தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

ஆங்கில புத்தாண்டை வரவிருக்கும் விதமாக நல்லம்பள்ளி அருகே கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு

Update: 2025-01-01 02:24 GMT
உலகெங்கும் பொதுமக்கள் 2025 ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் இடமாக நேற்று முதல் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவரும் சூழலில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பாக நேற்று நள்ளிரவு தேவ ஆலயங்களில் சிறப்பு மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அருட்தந்தை ஆரோக்கியசாமி மற்றும் உதவி பங்கு தந்தை அருட்திரு பெனடிக் மற்றும் அருட்சகோதரர் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் திருப்பலி முடிந்தபின் ஒருவரை ஒருவரை கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

Similar News